E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2997/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 2997/ ’12

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறுவர்  துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோக வழக்குகளின் மொத்த எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் விசாரணை முடிவடைந்துள்ளவற்றின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 2009ஆம் ஆண்டு முதல் இற்றைவரை விசாரணைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்  துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டணை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது;

      (ii) சிறுவர் துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உயர்ந்தபட்ச தண்டனை யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-11

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-17

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks