E   |   සි   |  

 திகதி: 2013-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3171/ 2013 - கௌரவ ஈ. சரவணபவன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 3171/ ’12

      கௌரவ ஈ. சரவணபவன்,—  தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    மொழிக் கொள்கை மீறப்படுமாயின் அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக வெளியிட்டுள்ள தமது கூற்றுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ஆமெனில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்களுக்கு சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்படுகின்ற இலங்கை அதிபர் சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பான சகல ஆவணங்களினதும் தமிழ்ப் பிரதிகள் உரிய பாடசாலைகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும்;

      (ii) ஊழியர் சேமலாப நிதியமானது, அதன் பயனாளிகளிடமிருந்து தமிழ் மொழி மூலம் கிடைக்கின்ற கோரிக்கைகளுக்கு சிங்கள மொழியில் மாத்திரம் பதில் அனுப்புவதற்குப் பதிலாக தமிழ் மொழியிலேயே பதில் வழங்க உரிய நிறுவனங்களை ஆற்றுப்படுத்துவதற்கும்

      நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-01

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks