பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3255/ ’12
கௌரவ புத்திக பதிரண,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சர்வதேச கடல் மார்க்கத்தை நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள காலி ரூமஸ்ஸல யப்பான் சமாதான தாதுகோபுரத்துக்கு அருகாமையில் சுவர்ணபூமி உறுதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளை வர்த்தகர்கள் கொள்வனவு செய்து அவற்றில் வீடுகளை அமைக்கும் போர்வையில் ஹோட்டல் கட்டிடத்தொகுதிகளுக்கான மாடிக் கட்டிடங்களை அமைக்கின்றார்கள் என்பதையும்;
(ii) உறவினர் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்கு அல்லது சாட்டுவதற்கு, இயலாத சுவர்ணபூமி உறுதிகளைக் கொண்ட மேற்படி காணிகளை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்வதில் அரச அலுவலர்களும் தொடர்புபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) சமாதான தாதுகோபுரத்தின் இருப்பிற்கு பாரிய தாக்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற மேலே குறிப்பிடப்பட்டுள்ள காணிகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-24
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-24
பதில் அளித்தார்
கௌரவ சிறிபால கமலத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks