E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3298/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

    1. 3298/ ’12

      கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     சுதேச மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்றுக்கு தொழில்முயற்சி நடவடிக்கைகளுக்காக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி தனியார் நிறுவனத்தின் பெயர் யாது என்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனம் குறித்த காணியைக் கோருகின்ற தொழில்முயற்சி நடவடிக்கை யாது என்பதையும்;

      (iv) மேலே குறிப்பிடப்பட்டுள்ள காணியை மேற்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதாயின், அதற்கு ஏற்புடையதான நிபந்தனைகள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி காணியைக் குறித்த நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கின்ற விலைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி சொத்தானது, சுதேச மருத்துவக் கல்லூரிக்கு உரித்தானது என்பதையும்;

      (ii) தற்போது சுதேச மருத்துவக் கல்லூரியில் இடவசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-06

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-06-06

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks