E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3434/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

    1. 3434/ ’13

      கௌரவ அருந்திக்க பர்னாந்து,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     ஜா-எல, கபாலகந்த வீதி, கனுவன வத்த, இலக்கம்: 103 இல் வசிக்கும்     திரு. ஜே.எம்.சீ. ரத்னாயக்கவின் காணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரிதொரு காணி பகிர்விற்கு எதிராக விதிக்கப்பட்ட இரண்டு தடை உத்தரவுகள் பேலியகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் திரு. மஹேஷ் பெரேராவின் கடுமையான அழுத்தத்தின் மீது நீக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) தடை உத்தரவு அமுலில் இருக்கையில் மேற்படி காணி பகிர்விற்காக  குறித்த காணி உரிமையாளர் இராணுவ உத்தியோகத்தர்களுடன் 2012.05.12 ஆம் திகதி வந்துள்ளாரென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்கூறப்பட்டவாறான தனிப்பட்ட பிணக்கில் அரச பாதுகாப்பு பிரிவினர் எவ்வாறு ஈடுபடுத்தப்பட்டனர் என்பதையும்;

      (ii) மேற்படி பொலிஸ் அத்தியட்சகரின் செயற்பாட்டுக்கு எதிராக பாதுகாப்பு செயலாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் செய்யப்பட்டுள்ள எழுத்துமூல முறைப்பாடுகள் தொடர்பிலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் மேற்படி காணி அளவை தொடர்பில் விடுக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக திரு. ஜே.எம்.சீ. ரத்நாயக்கவுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கும் அழுத்தத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற காணி அளவையின் போது திரு. ரத்நாயக்கவின் காணிக்கு ஏற்படக்கூடிய சேதங்களுக்கான பொறுப்பை ஏற்கும் தரப்பினர் யார் என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-21

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-21

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks