பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3465/ ’13
கெளரவ.பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுர மாவட்டத்தில் பாரியளவில் சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) இவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் யாவை என்பதையும்;
(iii) 2012 பெரும் போகத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில், சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு மற்றும் இவ்வாறு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் பெயர்கள், ஒவ்வொரு கமநல சேவை நிலையத்தின்படி தனித்தனியே யாவை என்பதையும்;
(iv) சேதனப் பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நெல் வகைகளின் தரம் பரிசோதனை செய்யப்படுகின்றதா என்பதையும்;
(v) ஆமெனின், அவ்விடங்கள் யாவை என்பதையும்;
(vi) சேதனப் பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்ற நெல் வகைகளை கொள்வனவு செய்கின்ற இடங்கள் உள்ளனவா என்பதையும்;
(vii) ஆமெனின், இவ்விடங்களின் பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-21
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-21
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks