E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3527/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3527/ ’13

      கெளரவ புத்திக பதிரண,— கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத்திய கலாசாரப் நிதியத்திற்குச் சொந்தமான ’கருமுனி வலவ்வ’ ஒரு தொல்பொருளியல் பெறுமதிமிக்க இடமென்பதையும்;

                 (ii)    இதற்குச் சொந்தமான கட்டிடங்கள் தற்போது சிதைவடைந்து வருகின்றதென்பதையும்;

      (iii) இந்த ‘வலவ்வ’ வுக்குச் சொந்தமான நிலப்பரப்பின் பகுதிகளை    பலவந்தமாக சில நபர்கள் கைப்பற்றியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனரென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கட்டிடங்களை மறுசீரமைத்த பின்னர் அரசுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடியவாறு ‘கருமுனி வலவ்வ’ வை உபயோகிக்க முடியுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;

      (ii) அவ்வாறாயின், இதை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (iii) இதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

      (iv) அவ்வாறாயின் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு;

      (v) மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

      (vi) இவ் வலவ்வவிற்குச் சொந்தமான காணியை பலவந்தமாக கைப்பற்றியுள்ளவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (vii) அவ்வாறாயின் அத்திகதி யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks