பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3588/ ’13
கௌரவ புத்திக பதிரண,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மாத்தறை மாவட்டத்தின், மாத்தறை, அக்குரெஸ்ஸ, கம்புருபிட்டிய ஆகிய தேர்தல் தொகுதிகளில் நில்வலா கங்கைக்கு அண்மையில் வாழ்கின்ற மக்கள் நதியிலுள்ள முதலைகளினால் பாரிய உயிராபத்தை எதிர்நோக்குகின்றனரென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை மேற்படி பிரதேசங்களில் முதலைகளால் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) நில்வலா நதியை அண்மித்த பிரதேசங்களில் நிலவுகின்ற முதலைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் எவ்வளவென்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-07
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
அனர்த்த முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-07
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks