பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3686/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

    1. 3686/ ’13

      கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      குவைட் நாட்டிற்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றுள்ள இலங்கைப் பெண்கள் 300 பேருக்கும் அதிகமானவர்கள் அங்கு அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ள பல்வேறு தொல்லைகள், கஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக சேவை நிலையங்களிலிருந்து தப்பிச் சென்றுள்ளதனால் வேறு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும்  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளார்கள் என்பதையும்;

      (ii) அவ்வாறு கஷ்டங்கள், துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை ஊழியர்களின் கஷ்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக குவைட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அலுவலர்களிடமிருந்து மேற்படி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான முறையான, துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) தற்போது குவைட் நாட்டில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை துரிதமாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-05

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-09

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks