பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4088/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 4088/ ’13

      கௌரவ புத்திக பதிரண,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு ,—

      (அ)    (i)      நாடு முழுவதிலும் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகங்களை வலையமைப்பு செய்வதற்கான கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா;

      (ii) இதற்கான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட நிறுவனத்தின் பெயர் யாது;

      (iii) அவ்வுடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னர் சாத்தியவள ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டதா;

      (iv) சம்பந்தப்பட்ட உடன்படிக்கையின் பிரதியொன்றினை இச்சபைக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பாரா;

      (v) அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாது

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) அஞ்சல் அலுவலக வலையமைப்புக் கருத்திட்டத்திற்காக செலவிட எதிர்பார்த்துள்ள பணத்தொகை யாது;

      (ii) அக்கருத்திட்டத்தின் காலவரையறை யாது;

      (iii) வலையமைப்பாக்கபட்ட அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை கட்டங்கட்டமாக தனித்தனியாக  எவ்வளவு

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-03-18

பதில் அளித்தார்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks