பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4128/ ’13
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 மாச்சு மாதம் 26 ஆம் திகதி வெலிமட அம்பகஸ்தோவ ஸ்ரீ சுமனஜோதி வித்தியாலயத்தின் மாணவர்கள் கொழும்பு நூதனசாலையைப் பார்வையிட வருகைதந்தார்கள் என்பதையும்;
(ii) நூதனசாலையின் படிக்கட்டுகள் இடிந்துவீழ்ந்ததன் காரணமாக அவர்கள் விபத்தொன்றை எதிர்நோக்கினார்கள் என்பதையும்;
(iii) மேற்படி விபத்து காரணமாக பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் காயமடைந்துள்ளார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி விபத்தினால் காயமடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள், முதியவர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;
(ii) விபத்திற்கு உள்ளான மேற்படி சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்;
(iii) விபத்திற்கு உள்ளான மேற்படி சிறுவர்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாது என்பதையும்;
(iv) விபத்திற்கு உள்ளான மேற்படி சிறுவர்களின் கல்வி நடவடிக்கைளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பாக முறையாக ஆராய்ந்து அத்தடைகளுக்கு பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) கமத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மேற்படி விபத்திற்கு உள்ளானவர்கள் உரித்தான குடும்பங்களுக்கு குறித்த விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசெளகரியங்களை தவிர்ப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள விதம் யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-22
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
தேசிய மரபுரிமைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-05
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ ஜகத் பாலசூரிய, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks