பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4212/ ’13
கெளரவ சுஜீவ சேனசிங்க,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (I) அமைச்சரவையும் திறைசேரியும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் தீர்மானங்களை மீறும் வகையில் இலங்கை மின்சார சபை தனது தற்றுணிபுக்கமைய தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நீண்டகால உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதென்பதையும்;
(ii) தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்கின்றபோது பல கோடி ரூபாய் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளதென கணக்காய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்பதையும்;
(iii) மேற்படி நிலைமையின் கீழ் மின்சார சபையில் இடம்பெற்றுள்ள பாரியளவு பண விரயம் மின்சார கட்டணப் பட்டியல் அதிகரிப்பதற்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது என்பதையும்;
(iv) மின்சார சபையில் பணிப்பாளர் பதவி வகிக்கின்ற ஒரு சில அலுவலர்கள் தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் சிலவற்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக செயலாற்றுகின்றார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) வாடகை அடிப்படையில் தனியார் துறையிலிருந்து வாகனங்களைப் பெறுகின்றபோது மற்றும் கொடுப்பனவுகளை செய்யும்போது இலங்கை மின்சார சபைக்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) இலங்கை மின்சார சபையினால் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களுக்கு மாதமொன்றுக்கு செலுத்தப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி வாகனங்கள் என்ன பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-07
கேட்டவர்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks