பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4220/ ’13
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தில் முழுநேர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஒவ்வொரு வருடத்திலும் மேற்படி நிறுவனத்தினால் செலவிடப்பட்ட பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) இலங்கையில் நீதிபதிகளின் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கத்தினால் போதியளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இயங்கும் விதத்திலான பல்கலைக்கழக மட்டத்திலான நீதிபதிகளை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கு கௌரவ அதாவுத செனவிரத்ன நீதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(ii) பல்கலைக்கழக மட்டத்திலான நீதிபதிகளை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கான கருத்துடன் இணங்குகின்றாரா என்பதையும்
(iii) ஆமெனின், இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-04
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-04
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks