E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4283/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

    1. 4283/ ’13

      கௌரவ துனேஷ் கங்கந்த,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன , மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2012 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட ரூபா 750/= வீதம் இராணுவ வீரர்களின் பெற்றோருக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்யும்போது கவனத்தில் கொள்ளப்படும் அளவீடுகள் யாவை என்பதையும்;

      (ii) தற்போது குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்தைப் பெற்றுள்ள இராணுவ வீரர்களது பெற்றோரின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) பெற்றோர் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் உரித்தைப் பெறுவதற்கு அடிப்படையாகவுள்ள இராணுவ வீரர்களின்  எண்ணிக்கை தரைப்படை, வான்படை மற்றும் கடற்படையென்ற ரீதியில் தனித்தனியாக யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதன்படி, மேற்படி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெற்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து ஓராண்டுக்கும் அதிக காலம் கடந்துள்ளபோதிலும் இற்றைவரை குறித்த கொடுப்பனவு சம்பந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) அவ்வாறெனின், பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெற்றோருக்கும் குறித்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iii) அதற்காக எடுக்கும் காலம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-21

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks