E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4320/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 4320/ ’13

      கௌரவ (திருமதி) அனோமா கமகே,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியளவில் நாட்டின் நெற் களஞ்சியசாலைகளில் காணப்பட்ட கையிருப்புத் தொகை எவ்வளவு என்பதையும்;

                 (ii)    மேற்படி நெற் கையிருப்பு கடந்த பெரும் போகத்தில் கொள்வனவு செய்யப்பட்டவையா என்பதையும்;

      (iii) இன்றேல், இதனை விட பழைய நெற் கையிருப்பு மேற்படி களஞ்சியசாலைகளில் காணப்பட்டனவா என்பதையும்;

      (iv) மேற்படி நெற் கையிருப்பை மக்களின் நுகர்விற்காக விநியோகிக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2013 ஆம் ஆண்டின் சிறு போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி அறுவடையை கொள்வனவு செய்வதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் திட்டமிட்டிருந்ததா என்பதையும்;

      (iii) அந் நிகழ்ச்சித் திட்டம் யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-07-09

பதில் அளித்தார்

கௌரவ அனோமா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks