பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4407/ ’13
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்போது ஆடை உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடும் கைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஆடைத் தொழிற்சாலைகளின் சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது அண்ணளவாக 30,000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றமையை அறிவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஆடைத் தொழிற்சாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் இற்றைவரை உள்ளூர் ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) எதிர்காலத்தில் மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக பங்களாதேஷ், இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களை வரவழைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், இவ்வாறான நிலைமையொன்று தோன்றுவதற்கு ஏதுவான காரணிகள் யாவை என்பதையும்;
(iv) இவ்விதமாக ஆடைக் கைத்தொழில்துறையில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக இந்நாட்டின் இளைஞர், யுவதிகளுக்குக் காணப்பட்ட தொழில் வாய்ப்புகளை இழக்க வேண்டி ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-22
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
முதலீட்டு ஊக்குவிப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-03
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks