E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4507/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

    1. 4507/ ’13

      கௌரவ சுஜீவ சேனசிங்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     அம்பாந்தோட்டை துறைமுகம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இற்றைவரை அதன் பராமரிப்புப் பணிகளுக்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;

                 (ii)    அம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக ரூபா 420 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதென்பதை  நிரூபிப்பாரா;

      (iii) அத்துறைமுகத்தினூடாக வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலமாகவும் மீள்-ஏற்றுமதி செய்ததன் மூலமாகவும் இற்றைவரை ஈட்டியுள்ள வருமானம் எவ்வளவு

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் அனைத்துவிதமான ஏற்றுமதிகளும் மீள் - ஏற்றுமதி செய்யப்படுகின்ற வாகனங்களை  தரையிறக்குதல் மற்றும் கப்பலேற்றுதலும் கொழும்புத் துறைமுகத்திலேயே மேற்கொள்ளப்பட்டதென்பதையும்;

      (ii) நியாயமான காரணமின்றி அந்நடவடிக்கைகளை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அகற்றி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுசென்றதன் மூலம் வாகன இறக்குமதியாளர்களுக்கு அதிக கிரயத்தை ஏற்க நேரிட்டுள்ளதென்பதையும்

      அவர் ஏற்றுக்கொள்கிறாரா?

      (இ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சர்வதேச கடல் மார்க்கத்தினூடாக நாளொன்றுக்கு ஏறக்குறைய 400 கப்பல்கள் பயணிக்கின்றனவா;

      (ii) அக்கப்பல்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகின்ற கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? 

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-07

கேட்டவர்

கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks