பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4568/ ’13
கெளரவ துனேஷ் கன்கந்த,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஊழியர்கள் மிகக்கூடுதலான வெளிநாட்டுச் செலாவணியை இலங்கைக்கு ஈட்டித்தரும் பத்து மத்திய கிழக்கு நாடுகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நாட்டிலும் சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு நாட்டிலும் இலங்கைத் தூதரகங்கள் அமைந்துள்ளனவா என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு தூதரகத்திலும் சேவையாற்றுகின்ற மொழிபெயர்ப்பு அலுவலர்களினதும் தொழில் அலுவலர்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி நாடுகளில் சேவையாற்றுகின்ற இலங்கை ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பீட்டளவில் போதியளவு பணியாட்டொகுதியினர் தூதரகங்களில் சேவையில் அமர்த்தப்படவில்லை என்பதை எற்றுக் கொள்கின்றாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இலங்கை ஊழியர்கள் மேற்படி நாடுகளில் பொலிசாரால் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனேயே அது தொடர்பாக இலங்கை தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இலங்கைக்கும் மேற்படி நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி அவ்வாறான முறையியலொன்றை வகுப்பதன் மூலம் சட்டப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற இலங்கை ஊழியர்களுக்கு தூதரகங்களின் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்புக் கிடைக்குமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-08
கேட்டவர்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks