E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4613/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

    1. 4613/ ’13

      கெளரவ சுஜீவ சேனசிங்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக்  கேட்பதற்கு,—

      (அ)     (i)      முப்படை அங்கத்தவர்களின் சம்பளங்கள் சார்பில் 2013 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி ஆண்டில் முப்படை அங்கத்தவர்களின் சம்பளங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 2013 ஆம் ஆண்டுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி பணத் தொகையில் கொழும்பு நகரை அழகுபடுத்தும் பொருட்டு ஒதுக்கப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) கொழும்பு நகரை அழகுபடுத்துகின்ற வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி பணத் தொகையில் கொழும்பு நகரை அழகுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக உழைப்பை வழங்கிய முப்படை அங்கத்தவர்களுக்கு மேலதிக கொடுப்பனவேதும் செலுத்தப்பட்டதா என்பதையும்;

      (v) மேலே (iv) இன் பிரகாரம் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனில், 2013 ஆம் ஆண்டுக்காக மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தித்திற்காக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத் தொகை மற்றும் அத் தொகை செலவிடப்பட்ட விதம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-08

கேட்டவர்

கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks