பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4662/ ’13
கெளரவ இரான் விக்கிரமரத்ன,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 ஆம் ஆண்டு சனவரி முதல் செப்டம்பர் வரை மதுவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட மதுபான உரிமங்களின் எண்ணிக்கையினையும்;
(ii) ஆண்டடிப்படையில், 2008 ஆம் ஆண்டு சனவரியிலிருந்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மதுபான உரிமம் வழங்கப்பட்டுள்ள கம்பனிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மொத்த மதுபான வரியையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மதுபான உரிமம் வழங்கப்பட்ட ஏதாவது கம்பனிகள் மதுபான வரி செலுத்துவதிலிருந்து தவறியுள்ளனவா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அவ்வாறு செலுத்தத் தவறிய கம்பனிகளின் பெயர்களையும்;
(iii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கம்பனியும் செலுத்த வேண்டிய மதுபான வரி நிலுவையின் மொத்தத் தொகையையும்;
(iv) மதுவரித் திணைக்களம் அவ்வாறு குறிப்பிட்ட ஏதேனும் கம்பனிக்கு உரிமத்தைப் புதுப்பித்துள்ளதா என்பதையும்;
(v) அவ்வாறாயின், அத்தகைய கம்பனிகளின் பெயர்களையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-08
கேட்டவர்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks