E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4673/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 4673/ ’13

      கெளரவ பி. ஹரிசன்,—  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கிருமிநாசினிகள் பதிவாளர் பதவியை வகிப்பதற்காக இருக்க வேண்டிய தகைமைகள் யாவையென்பதையும்;

                 (ii)     மேற்படி பதவியில் பணியாற்றவேண்டிய கால எல்லைகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி பதவிக்காக செலுத்தப்படும் சம்பளம் எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) “சிறுநீரக நோய்க்குக் காரணமாக அமையலாம்” என்ற அடிப்படையில் தற்போதைய கிருமிநாசினிகள் பதிவாளரால் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்காக இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள கிருமிநாசினி வகைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) இறக்குமதியை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள கிருமி நாசினிகள் யாவையென்பதையும்;

      (iii) உலக சுகாதார அமைப்பினால் நாட்டிற்கு இறக்குமதி செய்யாதிருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள கிருமிநாசினிகளை இறக்குமதி செய்தல் ஆரம்பிக்கப்பட்ட  ஆண்டு யாதென்பதையும்;

      (iv) தற்போது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள கிருமிநாசினிகள் வேறு பெயர்களின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கம்பனிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-07

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks