E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4808/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

    1. 4808/ ’14

      கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம் அஸ்வர்,— வனசீவராசிகள் வளப் பேணுகை  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மன்னார் மாவட்டத்தின் பெரியமடு கமத்தொழில் கிராமத்தில் வாழை, தெங்கு மற்றும் இதர பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக சேதம் ஏற்படுகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி கிராம மக்கள் காட்டு யானை தாக்குதல்கள் காரணமாக அச்சத்துடன் வாழ்கின்றார்கள் என்பதையும்

      அவர்  அறிவாரா?

      (ஆ) பெரியமடு கிராம மக்களுக்கு காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக எதிர்கொள்ள நேரிட்டுள்ள பயங்கர நிலைமையை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் வளப் பேணுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks