பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4855/ ’14
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் பௌத்த பிக்குமார் சம்பந்தமான புள்ளிவிபரங்கள் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சிடம் உள்ளதா என்பதையும்;
(ii) அதன் பிரகாரம் தற்போது இலங்கையில் வதிகின்ற பௌத்த பிக்குமார்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) 2013 ஆம் ஆண்டில் தீட்சைபெற்ற பௌத்த பிக்குமார்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவ்வாண்டில் தீட்சை துறந்த பிக்குமார்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இலங்கையில் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்காக பெரும் பணியாற்றுகின்ற மகா சங்கத்தினர் சாசனத்தை விட்டுச் செல்வதற்கான காரணங்களை இனங்கண்டு அவற்றுக்கான பரிகாரங்களை மேற்கொள்வதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இலங்கை பிக்குனிகள் சாசனம் சம்பந்தமாக அமைச்சிடமுள்ள புள்ளி விபரங்களின் பிரகாரம் தற்போது இலங்கையில் வதியும் பௌத்த பிக்குனிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2013 ஆம் ஆண்டில் பிக்குனிகள் சாசனத்தில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-10
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks