பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4906/ ’14
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 ஜனவரி மாதமளவில் ஓய்வூதியத் திணைக்களத்தில் ஓய்வூதிய பணிக்கொடை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இவர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடையைச் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் காணப்படுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு பணிக்கொடை முற்பணம் செலுத்துவதற்காக வருடாந்தம் பொதுத் திறைசேரியினால் ஒதுக்கப்படுகின்ற பணத் தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஓய்வூதிய சுற்றறிக்கை 2/2014 இற்கு அமைய இதுவரை ஓய்வூதியத் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பணிக்கொடை முற்பணத்தை எதிர்காலத்தில் வங்கிகளின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-21
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks