பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4907/ ’14
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மொத்த தடுப்புக்கைதிகளின் எண்ணிக்கையையும்;
(ii) இவர்களில் சந்தேகநபர்களாக அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையையும்;
(iii) சிறைக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மஹர சிறைச்சாலையில் “எல்” மற்றும் “என்” ஆகிய தடுப்புக் கூடங்கள் இரண்டும் சந்தேகநபர்களைத் தடுத்துவைக்க பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்;
(ii) மேற்படி கூடங்களில் அதிக நெருக்கடி நிலவுகின்றதென்பதையும்;
(iii) அங்கு மலசலகூட வசதிகளும், அருந்துவதற்கும் நீராடுவதற்கும் அவசியமான நீர் வசதிகளும் ஆகக்குறைந்த மட்டத்தில் நிலவுகின்றதென்பதையும்;
(iv) மேற்படி நிலைமைகள் காரணமாக அந்தக் கூடங்களில் தடுப்புக்கைதிகள் மிகவும் துன்பகரமான நிலைக்கு ஆளாகியுள்ளனரென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கும் இடங்களில் நிலவுகின்ற நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) மஹர சிறைச்சாலையின் தற்போதய அத்தியட்சகரின் பெயர் யாது;
(ii) மேற்படி சிறைச்சாலையில் பணியாற்றுகின்ற மொத்தப் பதவியணி எவ்வளவு;
(iii) மஹர சிறைச்சாலையின் அத்தியட்சகர் உள்ளிட்ட பதவியணியினர் அங்குள்ள தடுப்புக்கைதிகளை மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா;
(iv) ஆமெனில், அது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-22
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks