பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4920/ ’14
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006.02.28 ஆந் திகதி ரங்கிரி தம்புல்லை சர்வதேச கிரிக்கெற் விளையாட்டரங்கின் நிரந்தர சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர் 2011.12.31 ஆந் திகதி சேவையிலிருந்து நீக்கப்பட்டனரென்பதையும்;
(ii) இவர்களுக்கு ரூபா 250,000.00 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி விளையாட்டரங்கின் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது அவ்வூழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென இலங்கை கிரிக்கெற் நிறுவனத்தினால் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iv) ஆயினும் அவர்களைக் கவனத்திற் கொள்ளாமல் சிவில் பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 24 பேர் அவ்விளையாட்டரங்கில் சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்களின் பெயர்களை அவர் சபாபீடத்தில் சமர்ப்பிப்பாரா?
(இ) (i) மேற்படி விளையாட்டரங்கில் சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாது;
(ii) சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட மாதாந்தச் சம்பளம் எவ்வளவு;
(iii) இவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை;
(iv) மேலே (அ) (iv) இல் குறிப்பிடப்பட்டவர்களை ஆட்சேர்ப்பதற்காக விசேட நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்ட திகதி யாது;
(v) மீண்டும் ஆட்சேர்க்கப்படுகையில் நீக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமையால் இவர்கள் தீவிர அநீதிக்கு இலக்காகி உள்ளனரென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(vi) ஆமெனில் அதுசம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-10
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks