பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5167/ ’14
கௌரவ ஜோன் அமரதுங்க,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வத்தளை பிரதேச செயலாளர் பிரிவில், 179 ஆம் இலக்கம், எலபிட்டிவல கிராம அலுவலர் பிரிவின், நவம்மஹர கிராமத்திலுள்ள அரசாங்க காணிகளில் அத்துமீறிக் குடியேறியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி அத்துமீறிக் குடியேறிய குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
(ஆ) (i) மேற்படி குடும்பங்களில் அதிகளவு குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் மேற்படி கிராமத்தில் வசித்துவந்த போதிலும், இற்றை வரை இவர்களது காணிகளுக்கு நிரந்தர காணி உறுதியோ அல்லது தற்காலிக உரிமப்பத்திரமோ வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) இவர்கள் வசிக்கும் காணிகளுக்கு நிரந்தர காணி உறுதிகளை பெற்றுக்கொடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) நிரந்தர காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் வரை தற்காலிக உரிமப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;
(v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-08
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks