பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0067/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1.  

      கெளரவ புத்திக பத்திறன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) கமத்தொழிலுக்கான விவசாய இரசாயனங்கள், உரப் பாவனை மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் சுற்றாடல் அழிவினால் இலங்கையின் நீர் மூலங்கள் மாசடைந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) இலங்கையில் மக்களின் பாவனைக்கு பொருந்தாத நீரைக் கொண்ட ஆறுகள், வாவிகள் மற்றும் ஏனைய நீர் மூலங்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், நீர் மாசடைந்துள்ள பிரதானமான நீர் மூலங்கள் யாவை என்பதையும்;

      (iii) அந்த இடங்களை பாவனைக்கு உகந்த வகையில் துப்பரவு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) எதிர்காலத்தில் நீர் மூலங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-08-10

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks