E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0074/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 74/'15

      கௌரவ புத்திக பத்திறண,— உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ) (i) இலங்கையில் இன்றளவில் உள்ள தேசிய அடையாள அட்டை இல்லாத ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (ii) இவர்களுக்கு தேசிய அடையாள அட்டையொன்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்தது ஏன்;

      (iii) இவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பாரா;

      (iv) ஆமெனில், அது எவ்வாறு;

      (v) மேற்படி தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதா;

      (ii) ஆமெனில், 18 வயதைத் தாண்டிய இலங்கைப் பிரசைகள் அனைவருக்கும் அத்திட்டத்தின்கீழ் அடையாள அட்டைகளை வழங்க இயலுமா;

      (iii) அதற்கான திட்டங்கள் யாவை;

      (iv) மேற்படி புதிய கருத்திட்டத்திற்காக செலவிட எதிர்பார்க்கின்ற பணத்தொகை எவ்வளவு;

      (v) புதிய அடையாள அட்டைக்காக மக்களிடமிருந்து பணம் அறவிடப்படுமா;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-30

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.பீ. நாவின்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks