பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
79/ '15
கௌரவ சந்திம கமகே,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த ஐந்து ஆண்டுகள் தொடக்கம் யானை-மனித மோதல் தீவரமடைந்துள்ளதுடன் இதனால் மனித உயிர்களும் யானை வளமும் அழிவடைந்து வருகின்றதென்பதையும்;
(ii) முறைசாரா விதத்திலும் திட்டமிடப்படாத வகையிலும் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக காட்டு யானைகளிடமிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அநீதியான முறையில் தமது காணிகள் மற்றும் வீடுகளை இழப்பதன் மூலம் கிராமங்களில் வாழும் மக்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள மின்சார வேலி கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் தனித்தனியே யாவை என்பதையும்;
(iii) இன்றளவில் செயலிழந்துள்ள மின்சார வேலிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) மேற்படி (அ)(ii) இல் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இவ்வாறான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் உரிய முறையியலொன்று அமைச்சில் நிறுவப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-21
கேட்டவர்
கௌரவ சந்திம கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-21
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks