E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0264/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 0264/ ‘10

      கெளரவ ரஊப் ஹகீம்,—  பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    கடுகன்னாவ, குருகுன்தல, 18 ஆம் இலக்க இல்லத்தில் வதியும் பட்டதாரி ஆசிரியரான திரு. எஸ்.எம்.எம். ஹலீம் 2010.02.01 ஆம் திகதி தனது வேலைத்தளமான மாவனெல்ல சாஹிரா தேசிய பாடசாலையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் வெளி நபர் ஒருவர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து திரு. ஹலீமைத் தாக்கி இவரின் பிரத்தியோக வாகனமொன்றுக்கும் சேதம் விளைவித்துள்ளார் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) திரு. ஹலீம், இது சம்பந்தமாக மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் 273/06 ஆம் இலக்க, 2010.02.07 ஆம் திகதிய முறைப்பாடொன்றைச் செய்துள்ள போதிலும் அதுபற்றி இன்றுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?

      (இ) அரச பாடசாலை வளவொன்றினுள், கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி ஓர் ஆசிரியரைத் தாக்கியமை தொடர்பாக செய்யப்பட்ட மேற்படி முறைப்பாடு குறித்து, பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்துவதற்கான உத்தரவொன்றை வழங்க அவர் நடவடிக்கை எடுப்பாரா?

      (ஈ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2010-07-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks