E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0154/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 154/ '15

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 2015 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் இலங்கை அரச சேவைக்கும் அரச இணை நிறுவனங்களுக்கும் ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி (அ) வில் குறிப்பிடப்பட்ட காலத்தினுள் ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த நிறுவனத்திற்கு ஏற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி ஊழியர்கள் நிறுவனங்களுக்கு உள்ளீர்க்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iii) நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்தம் ஆகிய அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி (அ) வில் குறிப்பிடப்பட்ட ஊழியர்களில் 2015 யூன் மாதம் 28 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சோ்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (v) இவர்கள் உரித்தாகின்ற நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (vi) மேற்படி ஊழியர்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) மேற்படி (அ) வில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் சகல ஆட்சேர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டது போட்டிப் பரீட்சையின் மூலமா அல்லது நேர்முகப் பரீட்சையின் மூலமா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-01

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-01

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks