E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0162/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சந்திம கமகே, பா.உ.

    1. 162/ '15

       

      கௌரவ சந்திம கமகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மகாவலி வலயங்களில் குடியமர்த்தப்பட்ட ஆரம்ப விவசாயக் குடும்பங்கள் இன்றளவில் தமது மூன்றாவது பரம்பரை வரை வியாபித்துள்ளதென்பதையும்;

      (ii) இவர்கள் இன்றளவில் தமது தந்தைக்கோ அல்லது சகோதரர்களுக்கோ சொந்தமான 2½ ஏக்கர் விளைநிலத்தை கூட்டாகப் பயிர்செய்து ஈட்டிக்கொள்கின்ற சிறிதளவு வருமானத்தைக்கொண்டு மிகவும் சிரமத்துடன் வசிக்கின்றனரென்பதையும்;

      (iii) ஆரம்பக் குடியிருப்பாளர்களுக்கு குடியமர்வதற்காக வழங்கிய ½ ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மூன்று பரம்பரையினரும் சிறிய வீடுகளை அமைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் வசிக்கின்றனரென்பதையும் அவர் அறிவாரா?

      (iv) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-05

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-12-05

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks