பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0267/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. 267/ '15

      கௌரவ எம்.எச்.எம் சல்மான்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) முஸ்லிம் பள்ளிவாசல்கள், தர்ம நம்பிக்கை பொறுப்புகள் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பள்ளிவாசல், ஜும்ஆ பள்ளிவாசல், தக்கியா, சாவியா போன்ற சமயத் தலங்களுக்கு சொந்தமான காணிகளையும் கட்டடங்களையும் (வக்ப் சொத்துக்கள்) அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சுவீகரிக்கையில், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தை (வக்ப் பிரிவு) அறிவுறுத்தாமல் மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வக்ப் சொத்துக்களை சுவீகரிக்கையில், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைமுறை (ஏற்புடைய சட்டத்தின் பிரகாரம்) தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் மற்றும் திகதி யாவை என்பதையும்;

      (iii) அதன் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-11

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks