E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0302/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 302/'15

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு இந்தியாவுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றதா என்பதையும்;

      (ii) மேற்படி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கும் காலப்பகுதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி உடன்படிக்கை "சீபா" என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதையும்;

      (iv) இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதன் உள்ளடக்கம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-11

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks