E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0306/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 306/ '15

      கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015 நவெம்பர் 10 ஆம் திகதி அல்லது அதை அண்மித்த ஒரு தினத்தில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் ஜூலி பிசொப்பைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ள யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றில் பணியாற்றுவதற்காக அவுஸ்திரேலிய நீதிபதிகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பிரதிநிதிகள் குழுவினர் அரசாங்கத்தில் ஏதேனும் நிறைவேற்றுப் பதவிகளை வகிக்கின்றார்களா என்பதையும்.;

      (ii) மேற்படி குழுவினர் சனாதிபதியவர்களின் விசேட தூதுவர்களாக அல்லது பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதையும்;

      (iii) இலங்கை சார்பில் இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுக்க இவர்களுக்கு உள்ள அதிகாரம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இலங்கை அரசாங்கத்தின் அழைப்பேதுமின்றி அவுஸ்திரேலிய நீதிபதிகளை இந்நாட்டின் வழக்கு நடவடிக்கைகளுக்கென அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டா என்பதையும்;

      (ii) உத்தேச யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-12

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-02-12

பதில் அளித்தார்

கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks