பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
342/ '15
கௌரவ ஜயந்த சமரவீர,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சந்தைப்படுத்தல் மேம்பாட்டு பணிகளுக்காக சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நிறுவனங்களிலிருந்து விலை மனுக்கள் கோரப்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் பொருட்டு விலை மனுக்களை சமர்ப்பித்த சந்தை மேம்பாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு லொத்தர் சபை மற்றும் லொத்தர் வகைக்கேற்ப தனித்தனியாக யாவையென்பதையும்;
(iii) விலை மனுக்களை சமர்ப்பித்த நிறுவனங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு லொத்தர் சபை மற்றும் லொத்தர் வகைக்கேற்ப தனித்தனியாக யாவையென்பதையும்;
(ii) லொத்தர் மேம்பாட்டு பணிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு லொத்தர் சபை மற்றும் லொத்தர் வகைக்கேற்ப தனித்தனியாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி நிறுவனங்களை தெரிவு செய்கின்றபோது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட தகைமைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks