E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0417/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 417/ ’16

      கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     2015.01.08 ஆம் திகதி தொடக்கம் 2015.12.31 ஆம் திகதி வரை அரச ஊழியர்களுக்கு, கலைஞர்களுக்கு மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

      (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு  குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள அரச ஊழியர்களின், கலைஞர்களின் மற்றும் வர்த்தகர்களின் பெயர்களை வெவ்வேறாக சபையில் சமர்ப்பிப்பாரா;

      (iii) பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின், கலைஞர்களின் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

      (iv) இவ்விசாரணைகளின் முன்னேற்றம் வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2016-04-08

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-05-04

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks