E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0422/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 422/’16

       

      கௌரவ விஜித ஹேரத்,—  நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)    (i)     2015 சனாதிபதித் தேர்தலின்போது அரச ஊழியர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ரூபா 10,000/- பணத் தொகையில் பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 5/2015 இன் பிரகாரம் அரசாங்க, கூட்டுத்தாபனங்கள், சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள் என்பவற்றுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட ரூபா 8000/- தொகையானது அரச கருத்திட்டங்களின் பணியாட்டொகுதியினருக்கு கிடைக்கவில்லை என்பதையும்;

      (ii) முன்னைய சம்பள அதிகரிப்புக்களின்போது கருத்திட்டங்களின் ஊழியர்களுக்கும் அச்சம்பள அதிகரிப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி அ (i) இன் பிரகாரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு 10 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கருத்திட்ட பணியாட்டொகுதியினருக்கு அது வழங்கப்படாமை தொடர்பில் ஏதுவாயமைந்த காரணங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி சம்பள அதிகரிப்பை கருத்திட்ட ஊழியர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) உரிய சம்பள அதிகரிப்பை அரச கருத்திட்டப் பணியாட்டொகுதியினருக்கு துரிதமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iv) தற்போது 02 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச முகாமைத்துவச் சேவைகள் திணைக்கள சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2016-04-08

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks