பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0299/ ‘10
கெளரவ ஹரின் பர்னாந்து,— அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அமைச்சரவை பத்திரத்தின் மூலம் பெற்றுக்கொண்ட அனுமதியுடன் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய கொழும்பு 02, வொக்சோல் ஒழுங்கையில் இல. 53/75 எனும் இடத்தில் அமைந்துள்ள 100 பேர்ச்சஸ் வரையிலான காணித் துண்டு 300 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதென்பதையும்,
(ii) இந்தக் காணியை விற்பதற்கு அமைச்சரவை அனுமதியானது மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர் களின் சேமலாப நிதிய நிலுவைத் தொகையையும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் மற்றும் பணிக் கொடையையும் செலுத்துவதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) அந்த சேமலாப நிதியை செலுத்தி முடிப்பதற்குத் தேவைப்படும் பணம் எவ்வளவு என்பதையும்,
(ii) மேற்கூறிய 300 மில்லியன் ரூபாவிலிருந்து சேமலாப நிதியாக செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்,
(iii) சேமலாப நிதியாக தொடர்ந்தும் செலுத்தவுள்ள தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை கடந்த வருடம் நட்டத்தில் இயங்கியதா என்பதையும்,
(ii) அவ்வாறு நட்டத்தல் இயங்கியமைக்கான காரணம் என்ன என்பதையும்,
(iii) அவ்வாறெனின், அந்த வருடத்தின் நட்டம் மற்றும் இவ் வருடம் மே மாதம் வரை இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதையும்,
(iv) நிறுவனம் நட்டத்தில் இயங்கியதும் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணமாக அமைந்ததா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-09-08
கேட்டவர்
கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks