பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
437/'16
கௌரவ விஜித ஹேரத்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய இயந்திர உபகரண நிறுவனமானது அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திலிருந்து அகற்றப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அதனூடாக ஊழியர்களுக்கு இற்றைவரை வழங்கப்பட்ட ரூபா 4,000/= வருகைக் கொடுப்பனவு, ஆண்டிறுதி மிகையூதியம் மற்றும் ரூபா 40,000/= மரண உதவிக் கொடுப்பனவு போன்ற பல்வேறு கொடுப்பனவுகள் இழக்கப்படும் என்பதை அறிவாரா;
(iii) மேற்படி கொடுப்பனவுகளை புதிய நிறுவனம் மூலமாக ஊழியர்களுக்கு வழங்க அல்லது வேறுவிதமாக மீளளிப்பு செய்ய உடன்படுவாரா;
(iv) அவ்வாறின்றேல் ஊழியர்களுக்கு பாரிய அநீதி இடம்பெறுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(v) மேற்படி அநீதியைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திலிருந்து இந்நிறுவனம் அகற்றப்பட்ட பின்னர் தனி நிறுவனமாகப் பேணிவருவதற்குப் பதிலாக 50 டிப்போக்களாக மீண்டும் ஆரம்பிக்க திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், 50 டிப்போக்களுக்கு புதிதாக மின்சாரம், நீர், தொலைபேசி மற்றும் பிற செலவுகளை மேற்கொண்டு செயற்படுத்துவதற்கு பாரிய செலவினம் அவசியமென்பதை ஏற்றுக் கொள்வாரா;
(iii) அத்தகைய செலவினத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக வேறு மாற்றுவழியின்பால் கவனம் செலுத்துவதற்கு கருதுகிறாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-05-18
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks