பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0300/ ‘10
கெளரவ ஹரின் பர்னாந்து,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை ரம்புக்பொத்த ஊடாக கெந்தகொல்ல வரையிலான வீதியின் மலங்கமுவ ஓயாவுக்குக் குறுக்காக உள்ள மலங்கமுவ பாலம் 2007 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்குக்கு அகப்பட்டு உடைந்துள்ளமையும்,
(ii) மேலும் 2010, மே 01ஆம் திகதி பெய்த மழையை அடுத்து பாலத்தின் எஞ்சியிருந்த பகுதியும் உடைந்து பாரிய சேதமொன்று ஏற்பட்டுள்ளதையும்,
(iii) இதன் காரணமாக மலங்கமுவ, சிரிமல்கொடை, கெந்தகொல்ல, ஹின்னாரங்கொல்ல, எட்டம்பகஹகந்துர, முத்துமால, கஹட்டரூப்ப அடங்கலாக பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களின் போக்குவரத்து நடடிவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் மேற்படி மக்கள் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவ்வாறு 2 1/2 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதனைத் திருத்தி அமைக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்,
(ii) உரிய நியமங்களுக்கமைய பாலம் நிர்மாணிக்கப்படாமையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நிர்மாண ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
இச்சபைக்கு அவர் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-08
கேட்டவர்
கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks