E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0503/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சத்துர சந்தீப சேனாரத்ன, பா.உ.

    1. 503/ ’16 ​கௌரவ சத்துர சந்தீப்ப சேனாரத்ன,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் சிறப்பு வகுப்புக்கு பதவி உயர்வு அளிக்கும் பரீட்சை 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை நடாத்தப்படவில்லை என்பதையும்; (ii) இதன் காரணத்தினால் மேற்படி சிறப்பு வகுப்புக்கான பதவிகள் இன்றளவில் முழுமையாக வெற்றிடங்களாக உள்ளன என்பதையும்; (iii) 16 ஆண்டுகளுக்கு மேல் நிலவும் ஒரே பதவி உயர்வு வாய்ப்பையும் இழக்கச் செய்துள்ளதன் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) 06/2016 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் மூலம் 2006.01.01 ஆம் திகதியிலிருந்து மேற்படி சேவையின் சிறப்பு வகுப்பு சேவை நிலைமையிலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டதென்பதையும்; (ii) அதன் பிரகாரம், நாடளாவிய சேவை மட்டத்திலிருந்த மேற்படி வகுப்பு 2006 ஆம் ஆண்டிலிருந்து முகாமைத்துவ உதவியாளர் உயர் வகுப்பையும் விட குறைவான இடத்தில் வைக்கப்பட்டதென்பதையும்; (iii) மேற்படி நிலைமையானது, உத்தியோகத்தர்கள் சேவையை விட்டுச் செல்வதற்கும், கடும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை தோற்றுவிப்பதற்கும் ஏதுவாகி உள்ளதென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (இ) (i) பதவி உயர்வு வாய்ப்புகளை இழந்துள்ள மேற்படி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் யாதென்பதையும்; (ii) புதிய சேவைப் பிரமாணக் குறிப்புகள் மூலம் சிறப்பு வகுப்புக்கு 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட சேவை நிலையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்; (iii) ஆமெனில், மேற்படி ஏற்பாடுகளை உடனடியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-05-18

கேட்டவர்

கௌரவ சத்துர சந்தீப சேனாரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks