பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
511/ ’16
கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெலிகமை, வெள்ளக்க, சமகி மாவத்தையைச் சோ்ந்த திரு. ஜே.ஜி. ஜயந்த 2000.07.26 அன்று இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நடத்துநராக இணைந்ததுடன், அக்குரஸ்ஸ பேருந்துச் சாலையில் பணியாற்றி, மருத்துவ காரணங்களின் நிமித்தம் 15 வருட கால குற்றமற்ற சேவைக்குப் பின்னர் 2015.01.01 அன்று நோயின் காரணமாக ஓய்வுபெற்றார் என்பதையும்;
(ii) ஓய்வு பெறும்போது அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடைக் கொடுப்பனவு உரிய அதிகாரிகளிடம் பல வேண்டுகோள்கள் செய்யப்பட்ட போதும் இதுவரைக்கும் செலுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பணிக்கொடைக் கொடுப்பனவு எவ்வித தாமதமுமின்றி முழுமையாக மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், எத்திகதியில் அது வழங்கப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-05-03
கேட்டவர்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks