பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
604/'16
கெளரவ லக்கி ஜயவர்தன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 1980 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஒப்பனைச் சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒப்பனைச் சாதனங்களை இறக்குமதி செய்யும் போது அதற்கு ஒப்பனைச் சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) எனினும், 2015 இல் தாபிக்கப்பட்ட மருந்துகள் ஒழுங்குமுறையாக்கல் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் ஒப்பனைச் சாதனங்கள் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளதனால் உடலுக்கு கேடுவிளைவிக்கின்ற பாதகமான ஒப்பனைச் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதையும்;
(ii) உடலுக்கு பாதகமான மேற்படி ஒப்பனைச் சாதனங்களை பயன்படுத்துவோர் பல்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகி மரணமடைந்தும் மற்றும் நோய்வாய்ப்பட்டும் உள்ளார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) (i) இவ்வாறான சம்பவங்களைக் குறைப்பதற்கும், ஒப்பனைச் சாதனங்களின் இறக்குமதியை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குமென முறைசார்ந்த முறையியல் ஒன்றை துரிதமாக தயாரிப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-24
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks