E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0613/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 613/ '16

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மாகாண பாடசாலைகளில் பதிற்கடமை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஏறக்குறைய 4000 அதிபர்கள் பாடசாலைகளின் நிதிசார் அலுவல்கள் மற்றும் நிர்வாக அலுவல்கள் பற்றிய அறிவையும் பயிற்சியையும் பெற்றுள்ளனர் என்பதையும்;

      (ii) அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 3 ஆம் தரத்திற்காக மாத்திரம் 2015 இல் நடத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) அப்பரீட்சையில் தோற்றுவதற்கு 50 வயதை தாண்டியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதோடு 3 ஆம் தர அதிபர் பதவியை விட உயர்வான சம்பளப் படிநிலையில் இருந்த பெரும்பாலான ஆசிரியர்கள் தோற்றவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அதிபர் சேவைப் பிரமாணத்திற்கிணங்க 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் மேற்படி அடிப்படையில் சேவையாற்றியவர்கள் நேர்முகப் பரீட்சை ஊடாக நியமிக்கப்பட வேண்டியதாக இருப்பினும் இற்றைவரை அரசாங்கப் பாடசாலைகளில் பதிற்கடமையாற்றும் அதிபர்களின் சேவை நிரந்தரமாக்கப் படாமைக்கான காரணம் யாது;

      (ii) போட்டிப் பரீட்சைக்கேனும் தோற்றுவதற்கான வாய்ப்பினை இழந்த 50 வயதைத் தாண்டிய பதிற்கடமையாற்றும் அதிபர்களின் சேவையை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (iii) கடந்த அரசாங்கக் காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியவர்களுக்கு நிவாரணம் வழங்குவாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-11

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks