E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0711/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 711/ '16

      கௌரவ ஆனந்த அளுத்கமகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 ஆம் ஆண்டில் கங்க இஹல பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தின், கிராஉல்ல பிரிவில் விவசாய ஊக்குவிப்பாளராக கடமையாற்றும் உபாலி குமார கித்சிறி என்பவர் மோசடியான முறையில் அரசாங்க பணத்தை பயன்படுத்தி தமது சொந்த வீட்டுக்கு வீதியொன்றை நிர்மாணித்துள்ளார் என்பதையும்;

      (ii) மேற்படி வீதி கங்க இஹல கோரலே பிரதேச சபைக்கு உரித்தானதல்ல என்பதையும்;

      (iii) அனுமதியின்றியும் பலவந்தமாகவும் கிராஉல்ல விகாரைக்கு சொந்தமான வயல் காணியை நிரப்பி நிர்மாணிக்கப்பட்டதென்பதையும்;

      (iv) மேற்படி வீதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்க பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

      (v) தனிப்பட்ட வீதியொன்றுக்கு அரசாங்க பணத்தை செலுத்துவதற்கும் அனுமதியின்றி வயல் காணியை நிரப்புவதற்கும் அரசியல் அதிகாரம் பயன்படுத்தபட்டதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி விடயம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-12

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks