பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
780/ '16
கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 150 இற்கும் மேற்பட்ட தேசிய பாடசாலைகள் முறையாக நியமிக்கப்படாத அதிபர்களுடன் தொழிற்படுவதுடன் அப்பாடசாலைகளில் நிர்வாகம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) அத்தேசியப் பாடசாலைகளுக்கு அதிபர்களாகத் தொிவுசெய்யப்படக் கூடிய தகுந்த ஆசிரியர்களிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரியது என்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு இறுதியில் அமைச்சு இந்நோக்கத்திற்காகப் பரீட்சையொன்றை நடத்தியது என்பதையும்;
(iv) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2016 மார்ச் மாதம் நோ்முகத் தோ்வுகளை அமைச்சு நடத்தியது என்பதையும்;
(v) இற்றைவரை இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சினால் நடவடிக்கையெதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) அதிபர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கான காரணங்களையும் யாவையென்பதையும்;
(ii) பரீட்சார்த்திகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-07
கேட்டவர்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks