E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0814/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

    1. 814/ '16

      கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) வன பரிபாலனத் திணைக்களம் அல்லது வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கத்தினால் நிருவகிக்கப்படாத காடுகள் 2001ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரதேச செயலாளர் / உதவி அரசாங்க அதிபர் / பிரதேச இறைவரி அலுவரின் கீழ் நிருவகிக்கப்பட்டன என்பதையும்;

      (ii) 05/2001 ஆம் இலக்க சுற்றறிக்கையின் கீழ் இந்த அனைத்துக் காணிகளும் காடு பேணலதிபருக்கு ஒப்படைக்கப்பட்டன என்பதையும்;

      (iii) அரசாங்கத்தின் அவசர தேவைகளுக்கு அவசியமான காணிகளை 05/2001 ஆம் இலக்க சுற்றறிக்கையிலிருந்து விடுவிப்பதற்காக 02/2006 ஆம் இலக்கத்தின் கீழ் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டதென்பதையும்;

      (iv) அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்காக காணிகள் விடுவிக்கப்படுவதை அரச அதிபரின்/மாவட்ட செயலாளரின் தலைமையில் தாபிக்கப்பட்ட குழுவினூடாக மேற்கொள்வதற்காக 02/2006 ஆம் இலக்க சுற்றறிக்கையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) 05/2001 ஆம் இலக்க மற்றும் 02/2006 ஆம் இலக்க சுற்றறிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-08

கேட்டவர்

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks