பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0815/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணவீர, பா.உ.

    1. 815/ '16

      ​கௌரவ பிரசன்ன ரணவீர,— மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (​i) தரத்தில் உயர்ந்த சிறந்த பண்டங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நாடாளவிய சந்தைப்படுத்தல் வலையமைப்புடன் கூடிய அரச நிறுவனமாக கூட்டறவுத்துறை இயங்குகின்றதென்பதையும்;

      (ii) அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கூட்டுறவுச்சங்கம் பிரதானமான நிறுவனமாக பயன்படுத்தப் படுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கர்ப்பிணித் தாய்மார்களுக்காக செயற்படுத்தப்படுகின்ற "போசாக்கு பொதி" கருத்திட்டம் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் ஏனைய நிறுவனங்கள் ஊடாகவும் செயற்படுத்தப்படுகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டம் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மாத்திரம் செயற்படுத்தப்பட்டிருப்பின், இதை விட அதிகமானோருக்கு அனுகூலங்களை வழங்க முடியுமென்பதையும்;

      (iii) அதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யலாமென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

      (ஆ) (i) கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக மேற்படி கருத்திட்டத்தின் கீழ் இன்றளவில் விநியோகிக்கப்பட்டுள்ள உதவிகளின் நிதிசார் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (ii) அரச தலையீடு மற்றும் முறைசார்ந்த மேற்பார்வையின் கீழ் உள்ள கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக பெரும் எண்ணிக்கையானோருக்கு அனுகூலங்கள் கிடைக்கும் வகையில் போசாக்கு பொதி வழங்கும் வேலைத்திட்டத்தை நாடாளாவிய ரீதியாக செயற்படுத்தக்கூடிய இயலுமை காணப்படுகின்ற போது, வேறு தனியார் நிறுவனங்கள் ஊடாக அதனை மேற்கொள்வதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-08

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks